சீனாவில் சிறுவர்களுக்கு விஷம் வைத்த ஆசிரியயை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
சீனாவில் பள்ளி சிறுவர்களுக்கு விஷம் வழங்கிய சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் உள்ள சிறுவர் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரியும் வான் யுன் என்பவரே இவ்வாறு விஷம் வழங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை வழங்கியுள்ளார்.
சிறை தண்டனை
இதில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதுகுறித்த வழக்கில் அந்த நாட்டின் நீதிமன்றம் சந்தேகநபருக்கு 9 மாதம் சிறை தண்டனை வழங்கியது.
இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுவன் சுமார் 10 மாதம் கழித்து உயிரிழந்துள்ளார்.
மேலும் வான் யுன் தனது கணவரையும் விஷம் வைத்து கொன்றது அண்மையில் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த ஆசிரியருக்கு அந்நாட்டு நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
