அமெரிக்காவுடனான வரிப் போரை சமாளிக்க சீனா புதிய வியூகம்
உலக வர்த்தக உறவுகளில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், அமெரிக்காவுடன் தொடரும் வரி போரை சமாளிக்க சீனா புதிய வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் தனது உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது.
"சுவர்களை கட்டுவதற்குப் பதிலாக அதை இடிக்கிறோம்; கை விரித்து இணைவதைத்தான் விரும்புகிறோம், கைகளை முடக்கி வைக்க விரும்பவில்லை!" என்று சீன வெளிநாட்டு அமைச்சக பேச்சாளர் லின் ஜியான் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரி விதித்திருப்பது சீனாவின் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்க இறக்குமதிகள் மீது 125% சுங்க வரியை சீனா விதித்துள்ளது.
இந்த சீனா-அமெரிக்க வரி போராட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருள் பரிமாற்றங்களை 80% வரை குறைக்கக்கூடும் என்றும், உலகின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது ஒரு நகைச்சுவை அல்ல; மிகப்பெரிய எண்கள் மற்றும் கடுமையான முடிவுகள் இதன் பின்னணியில் இருக்கின்றன" என அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீன ஜனாதிபதி சி ஜின்பிங், தென்கிழக்கு ஆசியாவில் மூன்று நாடுகளை சுற்றிப்பார்க்கும் பயணத்தை திங்கட்கிழமை தொடங்கியுள்ளார். அவர் தற்போது வியட்நாமில் உள்ளார், அங்கு அமெரிக்கா 46% வரிகளை விதிக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட நிலைப்பாடுகளும், அத்துமீறிகளும் எதிர்க்கப்பட வேண்டும். உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலிகளை பலப்படுத்தி, ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்” என்று சீன ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சி ஜின்பிங் தனது இந்த சுற்றுப்பயணத்தின் போது வியட்நாம், மலேசியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுடன் பல ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
