அமெரிக்காவிற்கு மீண்டும் பதிலடி கொடுத்த சீனா: உயர்த்தப்பட்டுள்ள வரி
அமெரிக்கா (US) சீனாவிற்கு (China) எதிராக விதித்த பாரிய வரிகளுக்கு சீனா இன்று (11) பதிலடி கொடுத்துள்ளது.
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 145% ஆக அதிகரிப்பதாக வெள்ளை மாளிகை நேற்று (10) அறிவித்தது.
இதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை சீனா 84% லிருந்து 125% உயர்த்தியுள்ளது.
வரி விதிப்பு
அத்தோடு, சீனா விதித்த குறித்த வரியானது, நாளை (12) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனா மீது அமெரிக்கா அசாதாரணமாக அதிக வரிகளை விதிப்பது சர்வதேச வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதார சட்டங்கள் மற்றும் பொது அறிவை கடுமையாக மீறுவதாக சீன நிதியமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், இறுதியாக அறிவிக்கப்பட்ட வரிகளுக்கு கூடுதலான அமெரிக்காவின் அதிகரிப்புகளைப் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |