சீனாவின் மனிதாபிமான உதவி! இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் அரிசி
சீனாவின் மனிதாபிமான உதவியின் கீழ் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசியின் முதலாவது தொகை எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வந்தடையவுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் வகையில் 500 மில்லியன் யுவான் பெறுமதியான பொருட்களை அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவதாக அண்மையில் சீனா அறிவித்திருந்தது.
அதன் முதற்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனா அனுப்பி வைத்திருந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அண்மையில் இலங்கைக்கு வந்து சேர்ந்திருந்தது.
இலங்கைக்கு அரிசி வழங்க சீன நடவடிக்கை
அதன் அடுத்த கட்டமாக பத்தாயிரம் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆறு கட்டங்களில் இந்த அரிசி இலங்கையை வந்தடையவுள்ளதுடன் , அதன் முதற்கட்டத் தொகை எதிர்வரும் 25ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இரண்டாம் கட்ட அரிசித் தொகை ஜூன் மாதம் 30ம்திகதி இலங்கையை வந்தடையும் என்றும் , இவ்வாறு அன்பளிப்பாக வழங்கப்படும் அரிசியை இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளப்போவதாகவும் இலங்கைக்கான சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



