சீனா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது : கடும் அதிருப்தியில் அமெரிக்க அதிபர்
பருவநிலை நிலைமாற்றம் தொடர்பாக நடைபெற்ற மாநாட்டை சீனா புறக்கணித்துள்ளது. இதனால் உலக நாடுகளின் மதிப்பை சீனா இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) விமர்சித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். பருவநிலை மற்றும் G20 மாநாட்டை புறக்கணித்த சீனா அதிபர் ஜி ஜிங்பிங் (Xi Jinping) மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.
சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் உலக மக்களின் மீது செல்வாக்கை செலுத்தும் திறனை இழந்துவிட்டது. தங்கள் நாட்டு மக்களுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? உலகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினையில் புறமுதுகு காட்டுவது தான் இரு நாடுகளின் தலைமைக்கு அழகா என்றும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,