மீண்டும் அதிகரிக்கும் முறுகல் - தாய்வானை வட்டமிட்ட 19 சீனப் போர் விமானங்கள்
தாய்வானுக்கு அருகில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் ரோந்து சென்றதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர், தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.
இராணுவ ஊடுருவல்
கடந்த பெப்ரவரி மாதம் சீனாவின் போர் விமானங்கள் 253 முறையும் கடற்படை கப்பல்கள் 150 முறையும் தாய்வானின் வான்பரப்பு மற்றும் கடற்பரப்பில் ரோந்து சென்றதாக தாய்வான் கூறியுள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், தாய்வான் அருகில் சீனா தொடர்ந்து தனது இராணுவ ஊடுருவல்களை மேற்கொண்டு வருகிறது.
தாய்வானில் ஊடுருவுவதை மறைக்க சீனா இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்கக்கூடும் என அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி அட்மிரல் சாமுவேல் பாப்பரோ தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri