இலங்கைக்கான கடன் திட்டத்தை அங்கீகரித்த IMF! சீனாவின் நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்
நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு சீனா வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தமை குறித்து கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சீனா வெளியிட்டுள்ள நம்பிக்கை

மேலும் தெரிவிக்கையில், இது ஒரு நல்ல செய்தி. மேலும் இது நெருக்கடியை எதிர்கொள்ளவும் கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியேறவும் இலங்கைக்கு உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கி கடன் பிரச்சினைகளை விரைவாகவும், திறம்படவும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு நிதியுதவி ஆதரவை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri