மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு

Batticaloa Sri Lankan Peoples
By Bavan Sep 16, 2024 08:23 AM GMT
Report

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு - ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நேற்று (15) கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் கண்காணிப்பாளர்களுக்கு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

"நாடளாவிய ரீதியில் கடந்த 14ஆம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுள் கிடைத்துள்ளதுடன் 8ஆம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் கருத்து வெறும் எச்சரிக்கை அல்ல: உன்னிப்பாக அவதானிக்க கோரிக்கை

அமெரிக்காவின் கருத்து வெறும் எச்சரிக்கை அல்ல: உன்னிப்பாக அவதானிக்க கோரிக்கை

கண்காணிப்பு நடவடிக்கை  

கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களிலும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதுவரை கபே அமைப்பில் 934 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றமை தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது. 

2015, 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது சுமுகமான களநிலவரம் காணப்பட்டாலும் கடந்த 8ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத தேர்தல் பிரசாரம் அரச சொத்து துஸ்பிரயோகம், போன்ற முறைபாடுகள் அதிகரித்திருந்ததுடன் அந்த காலப்பகுதியில் வன்முறைகள் குறைவாக இருந்தன.

மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு | Children Used In Election Campaign In Batticaloa

அதேவேளை, கடந்த 8ஆம் திகதி - 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரசாரங்கள், காணொளி பதிவுகள், போலி முகநூல் மற்றும் வட்சப் ஊடாகவும் பதிவிடப்பட்டுள்ளன.  

இவ்வாறான செயற்பாடுகள் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு முன்னர் மாவட்ட இணைப்பாளர்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு சமாதான தேர்தலை செய்ய முடியாது. 

தமிழ்ப்பொது வேட்பாளருடன் முக்கிய கலந்துரையாடலில் மாவை

தமிழ்ப்பொது வேட்பாளருடன் முக்கிய கலந்துரையாடலில் மாவை

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை 

பிரதேசங்கள் மற்றும் எந்த எந்த இடங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என பதிவுகளை செய்வது வழமை. இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டுமாவடி பிரதேசங்களில் வன்முறை அதிகரிக்கப்படலாம் என்கின்ற சூழ்நிலை இருந்த போதிலும் இதுவரை எந்தவொரு பாரிய வன்முறையும் இடம்பெறவில்லை. 

மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுவதாக கபேவில் முறைப்பாடு | Children Used In Election Campaign In Batticaloa

மேலும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் எல்லா பிரதேசங்களிலும் சிவில் அமைப்புக்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்து தேர்தல் கள நிலவரம் தொடர்பாக அறிக்கைகளை பெற்றுவருகின்றனர். 

அதேவேளை, கபே அமைப்பு தேர்தல் தினத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.  இருந்தபோதும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரிடமும் வேண்டிக்கொள்ளுவது, இதுவரை காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கையில்  ஈடுபட்டமை போன்று தேர்தல் தினத்திலும் தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள்ளும் பின்பற்ற வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என கோரியுள்ளார். 

இலங்கை சிறையில் மனிதாபிமானம் அற்ற ரீதியில் நடத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : முன்வைக்கப்பட்ட விமர்சனம்

இலங்கை சிறையில் மனிதாபிமானம் அற்ற ரீதியில் நடத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : முன்வைக்கப்பட்ட விமர்சனம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US