திடீர் விபத்துகளுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
திடீர் விபத்துகளுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்தியரான பேராசிரியர் ருவந்தி பெரேரா தெரிவித்தார்.
இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் அறியாமை மற்றும் சோதனை செய்து பார்ப்பதன் ஊடாக இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.
தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், நம் நாட்டில் உள்ள தரவுகளை பார்க்கும்போது, விபத்துகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாங்கள் 16 வயது வரை சிறுவர்களாக பார்க்கிறோம்.
இதை பெரும்பாலும் இரு வெவ்வேறு வயதுக் குழுக்களாக பிரிக்கலாம். 2 முதல் 3 வயது வரையிலான அறியாமையால் ஏற்படும் விபத்துகள். அடுத்ததாக, 12 - 14 வயதுடையவர்கள் இளமைப் பருவத்தில் நுழையும் போது மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகள்.
வழங்கப்பட வேண்டிய அறிவுறுத்தல்
விபத்துகள் பல வடிவங்களில் வருகின்றன. விழுதல், சுளுக்கு மற்றும் தீக்காயங்கள் ஆகியவை சிறுவர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான விபத்துகளில் அடங்கும். விபத்துகளைத் தடுப்பதற்காக சிறுவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
