பிள்ளைகளுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலை செல்லுமாறு அறிவுறுத்தல்
காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை வீட்டில் வைக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமின்றி பிள்ளைகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனரும் வைத்தியருமான விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய சிறுவர் வைத்தியசாலைகளின் தயார் நிலை தொடர்பில் வைத்தியசாலையின் இயக்குனரிடம் வினவிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் வைத்தியசாலைகளில் இதுவரையில் எவ்வித கோவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களும் சிகிச்சை பெறவில்லை. வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளது.
காய்ச்சல், இருமல், சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் பிள்ளைகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல தயங்க வேண்டாம். கடந்த காலங்களில் தாமதமாக கொண்டு வரப்பட்டமையினால் சிறுவர்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் இது தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.