பெற்றோரால் கொலை செய்யப்பட்டு கழிப்பறைக் குழிக்குள் வீசப்பட்ட குழந்தை (Video)
நாட்டில் தற்போது பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு பதிவான பல சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கையில்,
சீதுவ பிரதேசத்தில் 6 மாத குழந்தையொன்று கொலை செய்யப்பட்டு கழிப்பறைக் குழிக்குள் வீசப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ். தெல்லிப்பழை, நல்லூர் கல்வியங்காடு பகுதிகளில் வாள் வெட்டு தாக்குதல்கள் மேற்கொண்டு திருடும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மேலும், பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் அதே பாடசாலையைச் சேர்ந்த 12 மற்றும் 07 வயதுடைய இரு மாணவர்களே தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதியில் வல்லையில் உள்ள மதுபான விற்பனையுள்ள விடுதியில் ஏற்பட்ட கைகலப்பில் போத்தல் குத்துக்கு இலக்காகிய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் தொடர்பான விரிவான தகவல்களை எமது குற்றப் பார்வை தொகுப்பில் காணலாம்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
