யாழில் ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்
யாழ்ப்பாணத்தில் டீசலை சோடா என நினைத்து பருகிய குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
ஊர்காவற்துறை - நாரந்தனை பகுதியை சேர்ந்த சதீஸ் சஞ்ஜித் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் வீட்டில் கடந்த 18ஆம் திகதி சிறிய ரக உழவு இயந்திர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிகிச்சை அளிப்பு
இதன்போது சோடா போத்தல் ஒன்றில் டீசலை ஊற்றி வைத்துள்ளனர். அதனை வீட்டில் இருந்த குழந்தை சோடா என கருதி அருந்தியுள்ளது.

இந்நிலையில், அதனை அவதானித்தவர்கள் குழந்தையை உடனடியாக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், குழந்தை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
யாழ் . போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri