வெல்லவாய விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு: பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதி
வெல்லவாய - மொணராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது மற்றும் 8 மாதங்கள் ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
முச்சக்கரவண்டியும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை காயமடைந்த நிலையில், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெல்லவாய பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் உயிரிழந்த சிறுவன் வெல்லவாய ஆனபல்லம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
