இரண்டரை வயது குழந்தை பரிதாபமான முறையில் உயிரிழப்பு
அம்பாறை அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையொன்று பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (02.03.2023) இடம்பெற்றுள்ளது.
சிகுமார் சஸ்வந்த் எனும் குறித்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்குள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் பேணப்பட்ட குழி
தாயும் உயிரிழந்த குழந்தையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றபோதே தாயார் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் குழந்தை வெளியேறியுள்ளது.
வெளியேறிய குழந்தை அருகில் இருந்த வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில்
நிர்மாணிக்கப்பட்ட மலசலகூட குழியில் விழுந்துள்ளது.
அதன் பின் சில நிமிடங்களில் குழந்தையினை காணாத தாயும் உறவினர்களும் தேடியபோதும் பிள்ளை கிடைக்கவில்லை. சந்தேகமடைந்த ஒருவர் அருகில் இருந்த மலசல கூட குழியில் இறங்கி தேடியபோது அக்குழியின் கீழே பிள்ளை கிடப்பதை அறிந்து வெளியே எடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோது பிள்ளை உயிரிழந்துள்ளது.
இதுபோன்ற இன்னுமொரு சம்பவம் கண்ணகி கிராமத்திலும் அன்மையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து உயிரிழந்த குழந்தையின் தந்தை இன்று வருகை தரும் நிலையில் இறுதிச்சடங்குகள் இன்று மாலை இடம்பெறுகின்றன.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்படும் இதுபோன்ற குழிகள் மூடப்படுவது மிக
முக்கியம் என்பதை இச்சம்பவங்கள் உணர்த்தியுள்ளதுடன் இது தொடர்பில் மக்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது சம்மந்தப்பட்டவர்களின் கடமை என்பதும் பெற்றோர்கள் தம்
பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
