கண்ணாடி போத்தல் துண்டு குத்திய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம்
முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் கண்ணாடி போத்தல் துண்டு குத்திய காயங்களுடன் குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் சடலம் மீட்பு
119 என்ற இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (08.06.2023) பிற்பகல் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் வேலைத்தளமொன்றுக்கு முன்னாள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாலம்பே - ஹல்பராவ பிரதேசத்தில் வசித்து வந்த 5 வயது 6 மாத குழந்தையே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பாட்டி, தாத்தாவின் பராமரிப்பில் இருந்த குழந்தை
உயிரிழந்த குழந்தையின் தந்தை பிரிந்து வாழ்வதாலும், தாய் பகலில் வேலைக்கு செல்வதாலும், குழந்தை பாட்டி மற்றும் தாத்தாவின் பராமரிப்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
