வெளிநாட்டில் தாய் - தந்தைக்கு பச்சை குத்தியவரால் மகளுக்கு நேர்ந்த கதி
பேருவளையில் தந்தையின் உடலில் பச்சை குத்துவதற்காக வந்த நபர், அவரின் 14 வயது மகளை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேருவளை பண்டாரவத்தையை சேர்ந்த சிறுமியின் தந்தை செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் மகள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை அழைத்து சென்ற நபர்
நேற்று காணாமல் போன மகள், உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, தான் மொரட்டுவையில் இருப்பதாகவும் தன்னை அழைத்து செல்ல வருமாறு கூறியுள்ளார்.

அதற்கமைய, மொரட்டுவைக்கு சென்ற பாட்டி, சிறுமியை அழைத்து வந்து பொலிஸில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் போது, மொரட்டுவை, உஸ்வத்தையில் உள்ள பச்சை குத்தும் நபரின் வீட்டில் தான் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறுமி தற்போது விசேட மருத்துவ பரிசோதனைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
You may like this,
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam