சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்தொன்று முன்னால் சென்று கொண்டிருந்த கை உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேருந்தின் சாரதி கைது
கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அனுராதபுரம் - ரம்பேவ பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதிய விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam
