வவுனியாவில் காெண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்தநாள் (Photos)
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்தநாள் காெண்டாட்டத்துடன் மாவீரர் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தோணிக்கல் வைரவர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் சங்க அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததோடு மாவீரரிகளிற்கான ஒரு நிமிட அகவணக்கத்துடன், உயிர் நீர்த்த மாவீரர்களிற்கான ஈகை சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
பிறந்த தினம்
அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினமான இன்று மாவீரர் குடும்பத்தினரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், போராளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














