இந்திய கடற்றொழிலாளர்கள் கைது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி
கடல் எல்லையை மீறியதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளமை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களே கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே நேற்று(24.07.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர் பிரச்சினை
தொடரும் இந்த சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலையும் ஏமாற்றமும் அளிப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின் நீண்ட காலமாக நிலவி வரும் இந்த பிரச்சனையை தீர்க்க இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட தொடர்புகள் இருந்தபோதிலும், களத்தில் நிலைமை மாறாமல் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அடுத்த மாதம் ராமநாதபுரத்தில் நடைபெறும் கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் மாநில மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும், அதில் இலங்கையின் கடற்படையினரின் கைது மற்றும் படகுகளை பறிமுதல் செய்வது குறித்தும் விவாதிக்க உள்ளதாகவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா எஸ் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
