கெஹெலியவுக்கு வழங்கப்பட்டுள்ள முதலமைச்சரின் இல்லம்
கண்டியில் தர்மபால மாவத்தையில் தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வசிப்பதற்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய மாகாண தலைமை செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீடு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்ற காலத்தில் வன்முறையாளர்களால் தீவைக்கப்பட்டது. இதனால், அவருக்கு கண்டியில் வசிப்பதற்கு வீடு இல்லாமல் இருந்தது.
இதனால், ஜனாதிபதி செயலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய மத்திய மாகாண முதலமை்சசரின் உத்தியோகபூர்வ இல்லம், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு தற்காலிமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.



