ஷானி அபேசேகர வழக்கில் இருந்து இடைவிலகிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மேனகா விஜயசுந்தர
முன்னாள் குற்றப்புலானாய்வு பொறுப்பதிகாரி ஷானி அபேசேகர சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மீளாய்வு மீதான மனு விசாரணையிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மேனகா விஜயசுந்தர இடைவிலகி உள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் ஷானி அபேசேகர சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மீளாய்வு மீதான மனு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மேனகா விஜயசுந்தர மற்றும் நீல்இத்தவெல முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்ததுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மேனகா விஜயசுந்தர, தான் இவ்வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாகவும், அதனை வேறு நீதி மன்றத்திற்கு ஆற்றுப்படுத்துமாறும் கோரியதையடுத்து பிணை மீளாய்வு மீதான மனு விசாரணைக்கு திகதி நியமிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பந்துல கருணாரத்ன மற்றும் குருசிங்க ஆகியோர் முன்னிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சட்டமா அதிபர் தரப்பில் பிரதி சொலிஸிடர் ஜெனரல் ஷானில் குலரத்ன ஆஜராகியதுடன் மனுதாரர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான விரான் மற்றும் தர்மஜா தர்மராஜா ஆகியோர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.




