வேறு நோய்கள் காரணமாக இறப்பவர்கள் கோவிட் மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்
கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், புற்றுநோய், இருதய நோய் காரணமாக இறக்கும் நபர்கள் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்றிய நிலையில், வேறு நோய்கள் காரணமாக இறக்கும் நபர்களை நாங்கள் கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உள்ளடக்க மாட்டோம்.
உதாரணமாக நேற்று இரண்டு மரணங்கள் நிகழ்ந்தன. கோவிட் தொற்றி இருந்தாலும் அவர்கள் லியூகேமியா நோய் முற்றியதால் இறந்துள்ளனர்.
கோவிட் இந்த மரணங்களுக்கு காரணமில்லை. இருதய நோய் காரணமாக உயிரிழப்பவர்களுக்கும் கோவிட் வைரஸ் தொற்று காரணமில்லை.
இவ்வாறான நோய்களால் இறப்பவர்களை நாங்கள் கோவிட் மரணங்கள் பட்டியலில் சேர்க்க மாட்டோட் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் சந்தியாவிற்கு கொலை மிரட்டல்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri