கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை: விலை மேலும் குறையலாம்
தமிழ் சிங்கள புத்தாண்டின் போது கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12.03.2024) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என கோழிப்பண்ணை தொழில்துறையினர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
கோழி இறைச்சியின் விலை
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்திக்கான செலவைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்த விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அமைச்சர் மகிந்த அமரவீர கூறுகையில், கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் பொதுமக்கள் மிகவும் கரிசனையுடன் காணப்படுவதால் நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறைந்தபட்ச விலையில் கோழி இறைச்சியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
