கோழி இறைச்சி விலை தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சி இறக்குமதி
அவ்வாறு இல்லையென்றால் கோழி இறைச்சியையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1300 முதல் 1500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக கோழி இறைச்சி கொள்வனவு செய்வதனை நுகர்வோர் குறைத்துக் கொண்டுள்ளனர்.
எனது கணக்கின்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபா வரைக்கும் விற்பனை செய்ய முடியும்.
பிரச்சினை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனவே கோழி இறைச்சி விற்பனையாளர்கள் பிரச்சினையை சுமூகமாக முடிக்க விரும்பாவிட்டால் கோழி இறைச்சியையும் இறக்குமதி செய்ய நேரிடும். நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இடமளிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சந்தையில் தற்பொழுது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 முதல் 1400 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
