கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு:சில்லறை சந்தையில் 1250 ரூபாய்
தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை சில்லறை விற்பனை சந்தையில் ஆயிரத்து 250 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதனை தவிர கோழி முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கோழி இறைச்சி உற்பத்தி 30 வீதத்திலும் முட்டை உற்பத்தி 40 வீதத்திலும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
மூடப்பட்டு வரும் கோழிப் பண்ணைகள்

இந்த நிலைமையில் கோழிப் பண்ணைகள் மூடப்பட்டு வருவதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலையானது 980 ரூபாய் என்ற மட்டத்தில் காணப்பட்டது.
மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு போன்ற காரணங்களினால், கோழிப் பண்ணை தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதில் தடையேற்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்தும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 30 நிமிடங்கள் முன்
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan