நீண்ட நாட்களின் பின் பலாலியில் தரையிறங்கிய இந்திய விமானம்
இரண்டாம் இணைப்பு
இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணம் பலாலிக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் பலாலியில் இன்று தரையிறங்கியுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணம் பலாலிக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படும் விமான சேவைகள்
திங்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கும் விமான சேவைகள் நடத்தப்பட உள்ளன.
அலயன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான இந்த விமான சேவைகளை நடத்தவுள்ளது.
இதற்கு முன்னர் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவைகள் நடத்தப்பட்டதுடன் கொரோனா தொற்று பரவலை அடுத்து அந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
Another step towards strengthening the millennia-old people to people connect between #India and #SriLanka. #Jaffna accords a warm and traditional welcome to the passengers of @allianceair 9I 101 Chennai - Jaffna flight. pic.twitter.com/trlkOLDbGE
— India in Sri Lanka (@IndiainSL) December 12, 2022
யாழ். பலாலி மற்றும் சென்னைக்கு இடையிலான விமான சேவை கடந்த நல்லாட்சி காலத்தில் ரணில் அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அதன் பின்னர் தற்போது ரணிலின் அரசாங்க காலத்தில் மீண்டும் சென்னை மற்றும் பலாலிக்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.