யாழ். சென்னை விமான சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகம்- சென்னைக்கான விமான சேவை 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிசார் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வாரத்துக்கு நான்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணம்
அதேபோன்று சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வாரத்தில் 4 நாட்கள் சேவை இடம்பெறும் என குடிசார் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து புறப்படும் விமானம் முற்பகல் 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி விமான நிலையத்திலிருந்து முற்பகல் 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
