செங்கலடி - மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - மாவடிவேம்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி வானொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று இரவு 09.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஓட்டமாவடி பகுதியிலிருந்து ஏறாவூர் நோக்கிச் சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிவேகமும், சாரதியின் தூக்கக் கலக்கமுமே இவ்விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் வீதியோர மின் கம்பத்தில் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் சம்பவத்தின் போது வானில் பயணித்த இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.








தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
