செம்மணி படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை! குவிக்கப்பட்டுள்ள கலகமடக்கும் பொலிஸார்
புதிய இணைப்பு
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
அதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
தற்போது போராட்டகளத்தில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இதற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.










பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
