செம்மணி நூலாக்கத்தில் சிங்கள ஊடவியலாளர் சந்தித்த அவலங்கள்! தரிந்து ஜயவர்த்தன வெளிப்படை
'செம்மணி'என்ற சிங்கள நூலை எழுத்துவற்காக, செம்மணி புதைகுழி தொடர்பில் தகவல்கள் தேடிக் கொள்வதில் பெரும் இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்ததாக அந்த நூலை எழுதியவர்களில் ஒருவரான தரிந்து ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி அவலங்கள் தொடர்பில், தரிந்து ஜயவர்தன மற்றும் தரிந்து உடுவேகெதர, எம்.எப்.எம்.பஷீர் ஆகியோர் இணைந்து சிங்கள மொழியில் எழுதிய 'செம்மணி'என்ற சிங்கள நூல் நேற்று முன்தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
[62FW6AW]
செம்மணி மனித அவலங்கள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,''1998 ஆம் ஆண்டு முதல் செம்மணி மனித அவலங்கள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில் தென் பகுதி ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.பேரினவாதிகள் மற்றும் இனவாதிகளால் தென்பகுதி உண்மை தகவல்கள் வடக்கிற்கும் வடக்கின் உண்மை தகவல்கள் தென்பகுதிக்கு வருவதை தடுத்தனர். இதற்கு அரசியல் வாதிகளும் துணை நின்றனர்.
நாம் இந்த நூலை எழுதுவதற்காக தகவல் தேடி செம்மணி புதைகுழிக்கு சென்றோம் ஆனால் அங்கு ஒன்றும் இல்லை.பின்னர் அண்மையில் இருந்த நூலகத்தில் பார்த்தோம் ஆனால் அங்கும் ஒன்றுமில்லை. அத்தோடு நாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றோம் அங்கே அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களே இருந்தன.
நாம் தகவல்களுக்காக 5000த்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை வாசித்தோம். மேலும் 52 பேருடன் கலந்துரையாடல் நடத்தினோம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் இருந்தனர்.
மனிதப் புதைகுழி
இவ்வாறு பெரும் இக்கட்டான சூழலில் தான் நூல் வெளிவந்துள்ளது. ஏன் இந்த அவலத்தை சிங்கள மக்கள் எமக்கு நடந்திருந்தால் என்ற பார்வையில் பார்க்க முடியாது? உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை கொண்ட சமூகத்தின் எதிர்பார்ப்பு இன்றும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து, 1995ஆம் ஆண்டு யாழ் குடா நாட்டை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர் அங்கு காணாமலாக்கப்பட்டோரின் உடலங்கள் செம்மணி பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த நிலையில், செம்மணி பகுதியில் 1999-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது அந்த பகுதியில் மனிதப் புதைகுழி காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மனிதப் புதைகுழியிலிருந்து பெருமளவிலான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்த செம்மணியை அண்மித்த பகுதியிலிருந்து தற்போது சித்துபாத்தி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.''என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்




