விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எப்பாவல பகுதியில் விவசாய நிலங்களில் பரவியுள்ள பூச்சி இனத்தால் நெற்கதிர்கள் செழிப்படையாமல் காய்ந்து போவதாகவும் அவற்றுக்கு இரசாயன பூச்சி கொல்லிகள் தெளித்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த எப்பாவல விவசாயிகள் விவசாய நிலங்களை வழமையாகத் தாக்கும் பூச்சி கொல்லிகள் என நாம் நினைத்து தொடர்ச்சியாகத் தெளிக்கும் இரசாயன பூச்சி கொல்லிகளைத் தெளித்தோம் ஆனாலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.
பூச்சி கொல்லிகள் தரமற்றதாக
பூச்சி கொல்லிகளின் தரமற்றதாக காணப்படுகிறது.நாம் இரண்டு முறை அதிகப் பணம் செலவழித்துக் குறித்த பூச்சி கொல்லிகளைத் தெளித்தாலும் பலன் கிடைக்கவில்லை.ஒரு முறை தெளிப்பதற்கு 12,000 தேவைப்படுவதாகவும் நாம் ஐந்து முறை பயன்படுத்தியும் பலன் கிட்டவில்லை.
உரிய அதிகாரிகளும் இவற்றை கவனிப்பதில்லை.சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகியுள்ளது என்றார். இந்த பூச்சிகள் நெற்கதிரின் சாரை உறிஞ்சிக் குடித்த பின்னர் அதன் வாழ்க்கை வட்டமும் முடிந்து விடுகிறது.
அத்தோடு அநுராதபுரத்தில் இரசாயன பூச்சி கொல்லிகளில் தரம் குறைந்துள்ளதாக ஆர்ப்பாட்டம் ஒன்றை (09) முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் இதற்கெதிராக கையொப்ப போராட்டம் மற்றும் மனு ஒன்றைக் கையளிக்க உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா



