கந்தளாய் குளத்தில் திடீர் சோதனை: 4000 மீட்டர் தடைசெய்யப்பட்ட நைலோன் வலைகள் மீட்பு
திருகோணமலை - கந்தளாய் குளத்தில் தடை செய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 4000 மீட்டர் நீளமான நைலோன் மீன்பிடி வலைகளை கந்தளாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான விசேட சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (10.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை
நேற்று மாலை கந்தளாய் குளப் பகுதியில் தடை செய்யப்பட்ட நைலோன் வலைகளைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் லக்மால் விஜேரத்னவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், கந்தளாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழுவினர் கந்தளாய் குளப் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட வலைகள்
இதன்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த சுமார் 4000 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட நைலோன் மீன்பிடி வலைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வலைகள் இன்றைய தினம் (11.08.2026) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri