யாழ். பெண்ணை திருமணம் செய்து நகைகளை அபகரித்து சென்ற புலம்பெயர் இளைஞர் - செய்திகளின் தொகுப்பு
புலம்பெயர் இளைஞரொருவர் தன்னை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறிக்கொண்டு யாழ். இளம் பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணின் நகைகளை அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட 'க..ன்' என்ற அந்த இளைஞர் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் வசித்து வருகின்றார். திருமணம் கடந்த மார்ச் மாதம் சென்னை ஆதித்யா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
சீதனம் என்று கூறி பல இலட்சங்கள்.. மாப்பிள்ளை குடும்பத்தாரின் போக்குவரத்துச் செலவுகள் என்று பல இலட்சங்கள் - இப்படி பெருந்தொகைப் பணம் அவருக்கு பெண்தரப்பால் வழங்கப்பட்டுள்ளது.
திருமண சம்பிரதாயங்கள் முடிந்து பெண்ணுடன் சில வாரங்கள் தங்கியிருந்த அந்த இளைஞர் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மறுபடியும் ஜேர்மனி சென்றுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
