சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி! மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா அவர்களின் கோரிக்கைக்கு அமைய மின்பிறப்பாக்கி இன்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
150kVA வலுவுடைய இந்த மின்பிறப்பாக்கி தற்காலிக அடிப்படையில் இன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
மின்பிறப்பாக்கி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் அதனை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தநிலையில், நிரந்தர மின்பிறப்பாக்கியை பெற்று, வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறையொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.
கொதிந்தெழுந்த மக்கள்
கடந்த வாரம் குறித்த வைத்தியசாலையில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ராமநாதன் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்களால் ஏமாற்றமடைந்த மக்கள் கொதிந்தெழுந்த நிலையில் பெரும் ஆர்பாட்டங்களை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது