வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிரான போராட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் விளக்கம்

Sri Lankan Tamils Jaffna Dr.Archuna Chavakachcheri
By Diasa Jul 17, 2024 07:21 AM GMT
Report

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு கோரி இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் சில மணிநேரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 08 மணி முதல் முன்னெடுக்க இருந்த பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றகோரி இன்றைய தினம் காலை 08 மணி முதல் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரனவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது

யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரனவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது

வெளியேற்றக் கோரி கட்டளை

இந்நிலையில் தமது பகிஷ்கரிப்பை கைவிட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடி, நகர்த்தல் பத்திரம் மூலம் வைத்தியர் அர்ச்சுனாவை விடுதியில் இருந்து வெளியேற்றக் கோரி கட்டளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிரான போராட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் விளக்கம் | Chavakachcheri Hospital Issue Dr Archuna

முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக 05 வழக்குகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சரி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், வைத்தியரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நடவடிக்கைகளில் ஈடுபட நீதிமன்றம் தடை விதித்ததோடு, அவரை 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா 5 சரீரப் பிணைகளில் விடுவித்தது.

அத்துடன் வைத்திய சாலையின் சுமூகமான செயற்பாட்டிற்காக, வைத்தியர் அர்ச்சனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் வைத்தியசாலையின் விடுதிக்குள் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கினர். இந்நிலையில் குறித்த விடயத்தில் சாவகச்சேரி வைத்தியசாலை விடுதி வைத்தியசாலை வளாகத்திற்கு உள்ளே அமைந்துள்ளது என்ற காரணத்தை குறிப்பிட்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவு எட்டப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 

இதன்காரணமாக காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நான்கு மணி நேரத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிரான போராட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் விளக்கம் | Chavakachcheri Hospital Issue Dr Archuna

நீதிமன்றத்தின் ஊடாக சாதகமான முடிவுகள் கிடைக்கபெறாதவிடத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கிளையினர் மீண்டும் இன்று மதியம் பகிஸ்கரிப்பை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சாவகச்சேரி வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் புலனாய்வு விசாரணை

சாவகச்சேரி வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் புலனாய்வு விசாரணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US