ChatGPT வழங்கிய பயண ஆலோசனை – விமான நிலையத்தில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ChatGPTஇன் ஆலோசனையை கேட்டு செயல்பட்ட பெண்ணுக்கு விமான நிலையத்தில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த Mery Caldass என்ற பெண், சமூக வலைத்தளங்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமான பின்தொடர்பவர்களுடன் உள்ள படைப்பாளர் ஆவார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள்
இவர் தனது விடுமுறையில், தனது காதலருடன் அமெரிக்காவின் Puerto Rico தீவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ChatGPTஇன் ஆலோசனையை கேட்ட அவர், அதன்படி விமான டிக்கெட், தங்குமிடம் என அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர், விமான நிலையத்தில் Check-in செய்ய சென்ற போது அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.
விமான நிலைய ஊழியர்கள், Puerto Rico தீவிற்கு செல்ல ESTA விசா தேவை, அது இல்லாமல் விமானத்தில் ஏற முடியாது என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ChatGPTயிடம் அவர் ஆலோசனை கேட்ட போது, ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் குறித்த தீவிற்கு செல்ல விசா தேவை இல்லை என தெரிவித்துள்ளது.
அதனை நம்பி, விமானம் ஏற சென்றவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
அமெரிக்காவிற்கு செல்ல விசா
விதிமுறைகளின்டி, ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விசா தேவை இல்லை. அதேவேளையில், பயணத்திற்கு முன்னதாக மின்னணு விசா எனப்படும் ESTA பெற வேண்டும்.
ஆனால் ChatGPT இந்த தகவலை தெரிவிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, ChatGPTஐ அந்த பெண் அழுதுகொண்டே பேசும் காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில் பேசிய அவர், “நான் எப்போதும் நிறைய ஆராய்ச்சி செய்வேன். ஆனால், ChatGPTயிடம் இது பற்றி கேட்டேன். அது இல்லை என கூறியது. இனி நான் அதை நம்ப மாட்டேன்.
நான் அதை சில நேரங்களில் திட்டுவேன். அதன் காரணமாக அது என்னை பழிவாங்கி விட்டது.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
