சர்வதேச கடற்பகுதியில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 440 புலம்பெயர்ந்தோரில் இலங்கையர்களும் மீட்பு (Video)
மால்டாவின் சர்வதேச கடற்பகுதியில் நெரிசலான மீன்பிடி படகில் இருந்து 440 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு இவ்வாறு பாதுகாப்பற்ற கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினர் நேற்று (05) இவர்களை மீட்டுள்ளனர்.
எட்டு பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் உட்பட 440 பேர் மீட்பு
எட்டு பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்தோர் இதில் அடங்குகின்றனர்.
கடந்த இரண்டு நாட்கள் உணவு அல்லது தண்ணீரின்றி கடலில் நான்கு நாட்கள் கழித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் ஒருவர் கடுமையான நீரிழப்பு காரணமாக மயங்கி விழுந்து ஹெலிகாப்டர் மூலம் மால்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இலங்கையர்களும் மீட்பு
இவ்வாறு மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, சோமாலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
100 பேர் கொண்ட குழுவைத் தவிர, புலம்பெயர்ந்தவர்களை தென்கிழக்கு இத்தாலிய துறைமுகமான பிரிண்டிசிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறப்பட்டதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 6,800 வருகையுடன் ஒப்பிடுகையில், இன்றுவரை 28,000 க்கும் அதிகமானோர் வருகையுடன், வட ஆபிரிக்காவில் இருந்து கடல் இடம்பெயர்வு அதிகரிப்பை இத்தாலி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
