தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று இரத உற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று (25.08.2026) இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று காலை வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.
நாளை தீர்த்த திருவிழா
துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ரத உற்சவம் இனிதே நடைபெற்றது.

12 நாட்களை கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த. 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் நடைபெற்றது.
இந்நிலையில் 11ஆம் நாளான இன்று (25) இரத உற்சவமும் 12ஆம் நாள் திருவிழாவாக நாளை (26) தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.








