வடக்கில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி இன்று புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (23) யாழ் புங்குடுதீவு பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திபவனி ஆரம்பமாகி நடைபெற்றது.
தியாகி தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வு
இவ் ஊர்தி பவனியானது புங்குடுதீவு பகுதியின் மக்கள் அஞ்சலிக்காக முக்கியமான இடங்களில் தரித்து நின்று அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டது.
இந்த ஊர்தி பவனிக்கு யாழ் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் வேலனை பிரதேச சபை உறுப்பினர்கள் புங்குடுதீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் மக்கள் ஆகியோர் உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.
வவுனியா
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் உள்ள வாடிவீட்டில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது மாவீரர்ளின் பெற்றோர் சார்பாக ஈகைச்சுடரினை ஏற்றியிருந்ததுடன் ஏனையவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் மாணவர்களிற்கான வினாவிடை மற்றும் நடன போட்டிகளும் இடம்பெற்றிருந்ததுடன் வெற்றி பெற்றவர்களிற்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இவ் அஞ்சலி நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேளாமாலிகிதன், யாழ் மாநாகர முன்னாள் மேயரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன், யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்க தலைவர் ஈஸ்வரன் மற்றும் போராளிகள் நலன்புரி சங்க முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடமராட்சி
தியாக தீபம் திலீபன் அவர்களது 38 வது நினைவேந்தல் பருத்தித்துறை தியாகி திலீபன் நினைவிடத்தில் வடமராட்சி மக்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப்டினென்ட் தென்றல் அவர்களது சகோதரரும், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான சி.வேந்தன் அவர்கள் ஏற்றிவைக்க மலர்மாலையினை பருத்தித்துறை நகரசபையின் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ்போல் அணிவித்ததை தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெ.ஜயகோபி, காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் ஆகியோர் அணிவித்தனர்.
தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பிரதிநிதி க.தவராசா அவர்கள் ஆரம்பித்துவைத்ததை தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இதில் ஆயுள்வேத மருத்துவரும், தமிழ் மக்கள் கூட்டணி வடமராட்சி அமைப்பாளருமான சிவகுமார், காணி உரிமைக்கான இயக்க தலைவர் இ.முரளிதரன்,ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் சுரேஸ்குமார், உட்பட பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.



