கேரளாவில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைப்பு
இந்தியாவில் கேரளா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 13 இலங்கை அகதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விலக்கிக் கொள்ளப்பட்ட சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டு
இதன்போது 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் விசேட தேவை கொண்ட 5 வயது சிறுவன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இந்திய சட்டத்தின்கீழ் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கோழிக்கோட்டில் உள்ள அரசாங்க பெண்கள் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் முயற்சி
இதேவேளை விசேட தேவை கொண்ட சிறுவன் தனது தாயுடன் திருவனந்தபுரம், அட்டகுளங்கரா சீர்திருத்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொல்லத்தில் உள்ள தங்கசேரியில் வைத்து இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொல்லத்தில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா அல்லது கனடா செல்ல திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam