லக்ஸ்மன் யாப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோர் மீது இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவியேற்பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்கு இலங்கை முதலீட்டு வாரியத்தின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இருவருக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம்
இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் பிரதிவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கமைய விசாரணையின் பின்னர் பிரதிவாதிகளை பிணையில்செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
