கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது
கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமம்
இதேவேளை பாரபட்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கு இல்லாமல் சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு உகந்த சூழலில் இலங்கை பொலிஸார் தற்போது செயற்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தற்போதைய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து அதிகாரிகளுக்கும் தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
