தடுப்பூசியால் கருவுறுதல் பிரச்சினையா? இளைஞர், யுவதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
இலங்கை வாழ் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன விடுத்துள்ளார்.
தம்புத்தேகமவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
இளைய சமுதாயத்தினரின் மத்தியில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கருவுறுதல் பிரச்சினை ஏற்படும் என்ற சந்தேகம் பரவலாக காணப்படுகின்றமையே இதற்கான காரணம்.
ஆனால் உலக நாடுகளில் இது தொடர்பில் எவ்வித ஆராய்ச்சியும் உறுதிப்படுத்தவில்லை.
எனவே இலங்கையில் இளைஞர், யுவதிகள் அச்சமின்றி கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
