வருமான வரியில் திருத்தம் : வெளியான அறிவிப்பு
தொழில் செய்யும்போது ஒருவர் ஒரு இலட்சம் ரூபாவுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி மட்டத்தை ஒன்றரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரியிலிருந்து விலக்கு
மேலும் தெரிவிக்கையில், 6 சதவீத வரிக்கு உட்படும் வகையில் தனி நபர் வருமான வரியின் முதலாவது பிரிவை 500,000 ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபா வரை திருத்தியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதற்கமைய, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100 வீத வரி விலக்கும் 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71 வீத வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதன்படி, மாதாந்தம் 250,000 ரூபா வருமானம் பெறும் ஒருவரின் வரி 61 சதவீதத்தால் விடுவிக்கப்படும்.
300,000 வருமானம் பெறும் ஒருவரின் வரி 47 சதவீதத்தால் விடுவிக்கப்படும்.
350,000 வருமானம் பெறும் ஒருவரின் வரி 25.5 சதவீதத்தால் விடுவிக்கப்படும்.
மேலும், வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |