தொடர்ந்து உயர்வடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று (13) வெளியிட்டுள்ள நாணமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.61 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 301.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல், விற்பனைப் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363.13 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 377 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302.73 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 315.16 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.58 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 212.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.03 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 191.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam