அமைச்சரவையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உயர்மட்ட அமைச்சரவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மாற்றத்தின் கீழ் ஆறு பிரதான அமைச்சு பதவிகள் மாற்றப்படவுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் சிலரின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோசமான செயல்திறன் கொண்ட எட்டு உயர்மட்ட அரச நிறுவனங்களின் பதவிகள் எதிர்வரும் காலங்களில் மாற்றப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. புத்தாண்டில் புதிய பயணத்தை மேற்கொள்வதற்கான முதல் படியாக இந்த மாற்றங்களை அரசாங்கம் மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விரைவில் நாட்டிற்கு திரும்பவுள்ள நிலையில், அவரது வருகையின் பின்னரே இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
புதிய வருடம் புதிய மாற்றத்துடன் புதிய பயணம் ஆரம்பிக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கோிக்கையின் முடிவாக இந்த அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.