ஐந்து வருடங்களுக்குள் இலங்கையில் ஏற்படப் போகும் மாற்றங்கள்
எமக்கு மக்கள் வழங்கிய காலவரை இன்னும் நான்கு வருடங்கள் உள்ளன. இந்த நான்கு வருடத்திற்குள் வாக்குறுதிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
“டித்வா” புயலால் ஏற்பட்ட பேரிடரினால் இருப்பிடங்களை இழந்தவர்களுக்கான வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நிக்கவரெட்டிய பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாற்றங்கள்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மக்கள் ஐந்து வருட காலத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, ஐந்து வருடங்களில் செய்யக் கூடியதை யாரும் ஒரு வருடத்தில் எதிர்பார்க்க முடியாது.

ஐந்து வருடத்திற்குரிய திட்டங்களை ஒரே வருடத்தில் செய்து முடிக்க முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் எங்களுடைய இலக்குகளை நாங்கள் செய்து முடிப்போம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிவேற்றுவோம்.
மக்கள் எங்களுக்கு கொடுத்த ஐந்து வருடங்களில் ஒரு வருடம் மாத்திரமே கடந்துள்ளது. ஏனைய நான்கு வருடங்களுக்குள் நாங்கள் உறுதியளித்த மாற்றங்கள் அனைத்தும் நிகழும்.
அத்தியாவசிய கோரிக்கைகள் அனைத்தும் எமது ஆட்சிக் காலப்பகுதிக்குள் மக்களுக்கு நிறைவேற்றித் தரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.