பிரதம செயலாளர் - சுகாதார பணிப்பாளரை மாற்றுங்கள்: விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் நேரில் கோரிக்கை
வட மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிரதமர் செயலாளர் ஆகியோரை மாற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் உள்ள பிரபல தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்கான வழிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மொழி தெரியாத அதிகாரிகள்
இந்நிலையில், வட மாகாணத்தில் தகுதியான நிர்வாகத் தரமுடைய அதிகாரிகள் இருக்கும் நிலையில், வெளியிடங்களிலிருந்து தமிழ் மொழி தெரியாத அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கு தகுதியானவர்கள் வட மாகாணத்தில் உள்ள நிலையில் அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், வடமாகாண சுகாதார பணிப்பாளர் தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம் வரை சென்றமை தொடர்பில் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன் வடக்கு சுகாதார பணிப்பாளரை விரைவாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடனிருந்தமை
குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
