தமிழ் மக்களது நிலை கருதி சிலர் தமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் : கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு
சிங்கள பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவி செய்த சக்திகளும் தமிழ் மக்கள் மத்தியிலே இருக்கின்றார்கள் அவர்கள் கூட எதிர்காலத்திலே தமிழ் மக்களது நிலைமை கருதி தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என ehlhளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டு்ள்ளார்.
தமிழ் பொது கட்டமைப்பு
மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்று முடிவுற்றிருக்கின்றது இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்
இந்த ஜனாதிபதி தேர்தலிலே ஒரு தமிழ் பொது வேட்பாளரை தமிழ் தேசிய கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொதுச் சபை என்று கூறப்படும் 83 அமைப்புகளும் இணைந்து ஒரு தமிழ் பொது கட்டமைப்பை உருவாக்கி இந்த ஜனாதிபதி தேர்தலை சந்தித்திருக்கின்றோம்.
இரண்டு லட்சத்துக்கு அதிகமான அலுவலக ரீதியாக அறிவிக்கப்பட்ட வாக்களிப்பு பெற்று வடகிழக்கில் மாத்திரம் அல்லாது சில நூறு வாக்குகள் கொழும்பிலிருந்து கூட கிடைக்கப்பெற்று இருக்கின்றது
இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு
இது தமிழ் மக்களுக்கு தமிழ் மக்களது கோரிக்கைக்கு தமிழ் மக்களது ஒற்றுமையை வலியுறுத்தி கிடைத்த வெற்றியாக நாங்கள் இதை கருதுகின்றோம்.
ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இடம் வினயமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் தற்போது தமிழ் மக்கள் எங்களது பிரச்சினைகளை மீண்டும் ஒருமுறை கொண்டு வருவதற்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி கணிசமான வாக்குகளை பெற்றிருக்கின்றோம்
இந்த ஒரு நிலைமை எதிர்காலத்திலே வராமல் இருக்க வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்பதை உணர்ந்து எங்களுடைய இன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை கொடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |