இங்கிலாந்தின் பயண விதிகளில் மாற்றம்! - கனடா, டென்மார்க்கில் இருந்து வரும் பயணிகளுக்கான அறிவிப்பு
இங்கிலாந்தின் கோவிட் பயண விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கனடா மற்றும் டென்மார்க்கில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, அசோர்ஸ், லிச்சென்ஸ்டீன் மற்றும் லிதுவேனியா ஆகியவை நாடுகளும் பசுமை பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பட்டியலிடப்பட்ட தாய்லாந்து மற்றும் மொண்டினீக்ரோவிலிருந்து வரும் பயணிகள் இப்போது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து வருகையாளர்களும் குறைந்தபட்சம் ஒரு கோவிட் பரிசோதனையாவது மேற்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், பல நாடுகள் இங்கிலாந்து குடியிருப்பாளர்கள் நுழைய தடை விதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பசுமை பட்டியல் நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு திரும்பும் பயணிகள், கோவிட் தடுப்பூசியில் இரண்டு அளவுகளை பெற்றிருந்தாலும், அல்லது பெற்றிருக்காவிட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
எனினும், அவர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அத்துடன், அவர்கள் திரும்பிய பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு பரிசோதனை செய்து, பயணிகளின் இருப்பிடப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் நாட்டவர்கள் மற்றும் இங்கிலாந்து குடியிருப்பாளர்கள் மட்டுமே சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளாக இருந்தால் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அவ்வாறு நாடு திரும்புபவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட விடுகளில் சுயமாக தனிமைப்படுத்த பணம் செலுத்த வேண்டும்.
பெரும்பாலான நாடுகள் ஆபத்தான நாடுகளில் பட்டியலில் (Amber list) உள்ளன. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்கள் இந்த நாடுகளில் இருந்த வரும் போது தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை,
ஆனால் அவர்கள் திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
இரண்டு தடுப்பூசிகளும் போடாதவர்கள் 10 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும், அதே போல் கோவிட் சோதனைகள் வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.